செய்திகள்

இந்திய அணியினருடன் இணைந்த உனாட்கட்

இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள ஜெயதேவ் உனாட்கட், வங்கதேசம் சென்று அணியினருடன் இணைந்துள்ளார்.

DIN

இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள ஜெயதேவ் உனாட்கட், வங்கதேசம் சென்று அணியினருடன் இணைந்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 31 வயது உனாட்கட், 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ரஞ்சி கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வான உனாட்கட், டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு வங்கதேசம் செல்வதில் சில நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டன. இந்நிலையில் சட்டோகிராமில் இந்திய அணியினருடன் தற்போது இணைந்துள்ளார் உனாட்கட். இதுகுறித்த தகவலை சமூகவலைத்தளங்களில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT