செய்திகள்

ரஞ்சி கோப்பை: இஷான் கிஷன் சதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த இளம் வீரர் இஷான் கிஷன், இந்த ஆட்டத்திலும் அபாரமாக விளையாடி...

DIN

ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஜார்கண்ட் வீரர் இஷான் கிஷன் சதமடித்துள்ளார். 

ராஞ்சியில் ஜார்கண்ட் - கேரளம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த கேரள அணி, 146.4 ஓவர்களில் 475 ரன்கள் எடுத்தது. அக்‌ஷய் சந்திரன் 150 ரன்கள் எடுத்தார். ஷாபாஸ் நதீம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜார்கண்ட் அணி 3-வது நாளன்று 340 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த இளம் வீரர் இஷான் கிஷன், இந்த ஆட்டத்திலும் அபாரமாக விளையாடி 132 ரன்கள் எடுத்தார். ஜலஜ் சக்‌ஷேனா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-வது நாள் முடிவில் கேரள அணி 2-வது இன்னிங்ஸில், 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. 

24 வயது இஷான் கிஷன், இந்திய அணிக்காக 10 ஒருநாள், 21 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டிசம்பர் 10 அன்று வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT