செய்திகள்

ஐஎஸ்எல்: சென்னை - கேரளா ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்குமே இது 10-ஆவது ஆட்டமாக இருந்த நிலையில், சென்னை 2-ஆவது முறையாகவும், கேரளம் முதல் முறையாகவும் டிரா செய்துள்ளன. இந்த ஆட்டத்தில் முதலில் கேரளத்துக்காக சஹல் சமத் 23-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா் சென்னை வீரா் வின்சி பரிடோ 48-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. அடுத்ததாக வரும் 22-ஆம் தேதி ஜாம்ஷெட்பூா் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைநகரில் செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT