செய்திகள்

மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய தெ.ஆ. பேட்டர்கள்!

மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

DIN

மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இரு நாள்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் 67 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பிறகு கைல் வெரைனும் யான்செனும் ஜோடி சேர்ந்து சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள். வெரைன் 52, யான்சென் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேம்ரூன் கிரீன் 5 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32, லபுஷேன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT