செய்திகள்

பாக்ஸிங் டே டெஸ்ட்: பிரபல பாகிஸ்தான் வீரர் நீக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், கராச்சியில் இன்று தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சமீபகாலமாக சொந்த மண்ணில் தொடர்ந்து 4 டெஸ்டுகளில் தோற்ற பாகிஸ்தான் அணி, இந்த டெஸ்டில் பிரபல விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஸ்வானை நீக்கி, சர்ஃபராஸ் அஹமதுவை அணியில் சேர்த்துள்ளது. அவர் கடைசியாக 2019 ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். மேலும் முதல்முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடுகிறார். 2018-ல் ஒரு டெஸ்டில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்சாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT