செய்திகள்

ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற வேண்டும்: பிரதமர் மோடி

DIN

கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் உத்தர்காண்ட் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் கார் இன்று (டிசம்பர் 30) விபத்துக்குள்ளானது. இதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார்.

 இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பந்த், தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். கார் வெள்ளிக்கிழமை அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம், ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.

இதில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்தார். 

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரிஷப் பந்த் விரைவில் நலம் பெற பலரும் விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளது மிகுந்த வேதனையைத் தருகிறது. நான் அவர் விரைவில் குணமடைந்து உடல்நலம் பெற கடவுளைப் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT