இந்தியா - மே.இ. தீவுகள் டி20 தொடர் நடைபெறும் கொல்கத்தாவில் 75% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. விளையாட்டு அரங்குகளில் 75% ரசிகர்கள் அனுமதியுடன் போட்டிகள் நடக்கலாம் என மேற்கு வங்க அரசு அனுமதி அளித்ததையடுத்து ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருட இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றபோது 70% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.