செய்திகள்

முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்து கே.எல். ராகுல் விலகல்: காரணம் என்ன?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்து நட்சத்திர பேட்டர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்து நட்சத்திர பேட்டர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் ஆமதாபாத் நகரில் நிலவும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 3 ஒருநாள் ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

ஒருநாள் தொடருக்காக ஆமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. 

இந்திய அணியில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாட கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா என ஐந்து பேட்டர்கள் மட்டுமே உள்ளார்கள். இதன் காரணமாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். 

கே.எல். ராகுல் என்ன ஆனார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? அவர் முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுலின் சகோதரிக்குத் திருமணம் நடைபெறுவதால் அவர் அதில் கலந்துகொள்வதற்காக முதல் ஒருநாள் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் இதர வீர்கள் ஆமதாபாத்துக்கு வந்துள்ள நிலையில் ராகுல் இன்னும் வரவில்லை. சகோதரியின் திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு 2-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாட ராகுல் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT