முகப்பு
செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸில் ஷிவம் துபே!

ஆல்-ரௌண்டர் ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு எடுத்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
கோப்புப்படம்
பகிர்:


ஆல்-ரௌண்டர் ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு எடுத்துள்ளது. 

ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவது நாளாக பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லியாம் லிவிங்ஸ்டன், விஜய் சங்கர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்ய முயற்சித்தது. ஆனால், விலை உயர்ந்துகொண்டே இருந்ததால், இறுதியில் பின்வாங்கியது.

இதையடுத்து, ஆல்-ரௌண்டர் ஷிவம் துபே பெயர் அறிவிக்கப்பட்டது. அவரைத் தேர்வு செய்ய சென்னை அணி நிர்வாகம் முனைப்பு காட்டியது. பெரும் யோசனைக்குப் பிறகு ரூ. 4 கோடி வரை சென்னை முன்னேறிச் சென்றது. இறுதியில் ரூ. 4 கோடிக்கு துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது.

துபே இதுவரை 24 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 22.17. ஸ்டிரைக் ரேட் 120.54. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக, இந்தியா வீரர்கள் சௌரப் திவாரி, சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோரை யாரும் தேர்வு செய்யவில்லை. இதேபோல ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்தின் டேவிட் மலான், இயான் மார்கன் ஆகியோரையும் யாரும் தேர்வு செய்யவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →