முகப்பு
செய்திகள்

முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; பிஷ்னாய் அறிமுகம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
கோப்புப்படம்
பகிர்:


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் களமிறங்குகிறார். ரவி பிஷ்னாய் அறிமுக ஆட்டக்காரராகக் களமிறங்குகிறார்.

காயம் காரணமாக கடைசி 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் பொல்லார்ட் டி20யில் அணிக்குத் திரும்பியுள்ளார். 

இந்திய அணி:

இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னாய், யுஸ்வேந்திர சஹால். 

முழு கட்டுரையைப் படிக்க →