மேக்ஸ்வெல் 
செய்திகள்

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா (ஹைலைட்ஸ் விடியோ)

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

DIN

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியாவில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி தோற்றது. 3-வது டி20 ஆட்டம் கான்பெராவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மூன்று விக்கெட்டுகள் எடுத்த கேன் ரிச்சர்ட்சனின் அற்புதமான பந்துவீச்சால் இலங்கை அணி, 20 ஓவர்களீல் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் தசுன் ஷனகா ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 39 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்த இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனா, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியுடன் தகாறு: கணவா் தற்கொலை

பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வீட்டுமனைப் பட்டா கோரி கிராம மக்கள் மனு

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT