முகப்பு
செய்திகள்

ரஞ்சி கோப்பை: 10 சிக்ஸர்களுடன் 156 ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே

சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கர்நாடகம் - ரயில்வே அணிகள் மோதுகின்றன.

Updated On : 17 பிப்ரவரி 2022, 5:31 pm IST
மனிஷ் பாண்டே (கோப்புப் படம்)
பகிர்:

ரஞ்சி கோப்பைப் போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. 

சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கர்நாடகம் - ரயில்வே அணிகள் மோதுகின்றன.

முதலில் பேட்டிங் செய்து வரும் கர்நாடக அணி, முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் மனிஷ் பாண்டே, 121 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 156 ரன்கள் குவித்து அசத்தினார். நடுவரிசை வீரர் கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், 140 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Advertisement

Advertisement

32 வயது மனிஷ் பாண்டே இந்திய அணிக்காக 2015 முதல் 2021 வரை 29 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.