செய்திகள்

மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: விராட் கோலி விலகல்

கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு இன்று காலை அவர் வெளியேறியுள்ளார்.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல வீரர் விராட் கோலி விலகியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. டி20 தொடரில் இதுவரை நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. 2-வது டி20 ஆட்டத்தில் விராட் கோலி 52 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.

இந்நிலையில் மே.இ. தீவுகளுக்கு எதிரான மீதமுள்ள ஒரு டி20 ஆட்டத்திலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதற்காக கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு இன்று காலை அவர் வெளியேறியுள்ளார். இதையடுத்து அடுத்து நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் விராட் கோலி பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி பங்கேற்கவுள்ளார். தனது 100-வது டெஸ்டை மொஹலியில் விளையாடுகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT