செய்திகள்

இலங்கை டி20 தொடர்: இரு இந்திய வீரர்கள் விலகல்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவும் தீபக் சஹாரும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

DIN


இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவும் தீபக் சஹாரும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் தொடங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடியபோது சூர்யகுமார் யாதவுக்கும் தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்கள். இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 

தீபக் சஹார்

இருவரும் பெங்களூருக்குச் சென்று நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயங்களுக்குச் சிகிச்சை பெறவுள்ளார்கள். இருவரும் டெஸ்ட் தொடரில் இடம்பெறாததால் அடுத்ததாக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

ஜெய்ப்பூரில் பள்ளியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் சென்ற 3 பேர் பலி

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

SCROLL FOR NEXT