ராபர்ட் லெவன்டௌஸ்கி 
செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து: ரஷியாவுடன் விளையாட போலந்து மறுப்பு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் 2022 உலகக் கோப்பை கால்பந்தில் ரஷியாவுக்கு எதிராக விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

DIN


உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் 2022 உலகக் கோப்பை கால்பந்தில் ரஷியாவுக்கு எதிராக விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் பிளே ஆஃப் பிரிவில் போலந்து அணி வரும் மார்ச் 24-ம் தேதி மாஸ்கோவில் ரஷியாவை எதிர்கொள்கிறது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா பலமுனை ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால், ரஷியாவுடனான ஆட்டத்தில் விளையாட போலந்து அணி மறுப்பு தெரிவித்துள்ளது. போலந்து கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த முடிவை ஆதரித்து ட்வீட் செய்துள்ள போலந்து நட்சத்திர கால்பந்து வீரர் ராபர்ட் லெவன்டௌஸ்கி, உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல் தொடரும் நிலையில் ரஷியாவுடன் விளையாடுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவே சரியான முடிவு என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT