2ஆவது டி20 கிரிக்கெட்: இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் சிறப்பான துவக்கம் அளித்ததோடு அதிரடியாகவும் விளையாடினர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் குணதிலகா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இந்த நிலையில களமிறங்கிய ஷனாகா, நிசாங்காவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க ஆட்டக்காரர் நிசாங்கா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் அவர் 75 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. ஷனாகா 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.