செய்திகள்

3-ஆவது டி20: இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு

DIN

இலங்கைக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது டி20-கிரிக்கெட் ஆட்டம் தா்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். ஆனால் குணதிலகா, தான் சந்தித்த முதல் பந்துலேயே ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இவரைத் தொடர்ந்து நிசங்காவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அசலங்கா 4, ஜனித் லியனகே 9 ரன்கள் என அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் சண்டிமால், டாசன் ஷனகா ஆகியோர் பொறுப்பாக விளையாடி அந்த அணியை மீட்டனர். எனினும் சண்டிமால் 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

மற்றொரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாசன் ஷனகா அரைசதம் கடந்து அசத்தினார். இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. டாசன் ஷனகா 74, சமிகா கருணாரத்னே 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT