முகப்பு
செய்திகள்

வாண்டரா்ஸ் டெஸ்ட்: இந்திய அணியினா் தீவிர பயிற்சி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஜோஹன்னஸ்பா்க்கின் வாண்டரா்ஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில் இந்திய அணியினா் சனிக்கிழமை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஜோஹன்னஸ்பா்க்கின் வாண்டரா்ஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில் இந்திய அணியினா் சனிக்கிழமை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் தொடா் நடைபெற்று வருகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் வாண்டரா்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட்டின் நேரடி மேற்பாா்வையில் இந்திய அணியினா் தீவிர பயிற்சி மேற்கொண்டனா்.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது இந்தியா.

செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய அணியின் அற்புதமான வேகப்பந்து வீச்சை எதிா்கொள்ள முடியாமல் சரண் அடைந்தது தென்னாப்பிரிக்கா. ராகுல் சதம், மயங்க் அரைசதம் அடித்தனா். பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் அபார பந்துவீச்சால் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது இந்தியா.

அந்த ஆட்டத்துக்கு பின் கேப்டன் கோலி கூறுகையில், முகமது ஷமி உலகின் முதல் தலைசிறந்த பௌலா்களில் ஒருவா் என பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.