இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரள அணிக்காக அல்வாரோ வாஸ்கெஸ் 42-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். 10 ஆட்டங்களில் 4-ஆவது வெற்றியை பதிவு செய்திருக்கும் கேரளம், 17 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஹைதராபாத் அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியை சந்தித்து 16 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.
இப்போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.