முகப்பு
செய்திகள்

ஐபிஎல் விளம்பரதாரராக டாடா நிறுவனம் ஒப்பந்தம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளின் புதிய விளம்பரதாரராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜனவரி, 2022 at 3:23 PM
ஐபிஎல் விளம்பரதாரராக டாடா நிறுவனம் ஒப்பந்தம்
பகிர்:

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளின் புதிய விளம்பரதாரராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கிரிக்கெட் போட்டிகளின் மீது பெரிய ஆர்வத்தை ஏற்படுத்திய ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஸ்பான்சராக இருந்த  ‘விவோ’ நிறுவனத்திற்கு பதில் இனி அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக டாடா நிறுவனம் செயல்படும் என இந்தியன் பிரீமியர் லீக் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். 

சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளின் விளம்பரதாரராக 2018-2022 வரை ரூ.2,200 கோடிக்கு ஒப்பந்தமாயிருந்த நிலையில் அதன் காலக்கெடு முடிந்ததால் டாடா நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.