செய்திகள்

டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகல்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

DIN


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி கடந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.

இதையடுத்து, மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கோலி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT