முகப்பு
செய்திகள்

தோனிக்குப் பெரிய நன்றி: கோலி நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தகுந்த நபராக என்னைக் கண்டறிந்து நம்பியதற்காக எம்எஸ் தோனிக்கு நன்றிகள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:


இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தகுந்த நபராக என்னைக் கண்டறிந்து நம்பியதற்காக எம்எஸ் தோனிக்கு நன்றிகள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட் கோலியை, ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்தும் பிசிசிஐ நீக்கியது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா.

இந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி இன்று (சனிக்கிழமை) அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்த அறிக்கையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் தோனி பற்றி கோலி குறிப்பிட்டுள்ளதாவது:

"இறுதியாக, இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தகுந்த நபராக என்னைக் கண்டறிந்து, ஒரு கேப்டனாக என்னை நம்பியதற்காக எம்எஸ் தோனிக்குப் பெரிய நன்றி."

முழு கட்டுரையைப் படிக்க →