செய்திகள்

தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து முக்கியப் பந்துவீச்சாளர் விடுவிப்பு!

இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

DIN


இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதிக பணிச்சுமை காரணமாக அவர் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள கிரிக்கெட் வாரியம் அவருக்குப் பதில் மாற்று வீரர் யாரும் சேர்க்கப்படவில்லை என்றும் அறிவித்துள்ளது.

இருஅணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நாளை போலண்ட் பார்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT