செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் (55), தவான் (29) களமிறங்கினர். கோலி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் 85 ரன்களை குவித்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்தது. 

இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர்களான மலன், டி காக் ஆகியோர்  அரைசதம் கடந்து முறையே 91, 78 ரன்களை எடுத்தனர். இதனால் அணியின் ரன்வேகம் அதிகரித்தது. அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர். 

முடிவில் தென்னாப்பிரிக்க அணி 48.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT