செய்திகள்

மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சு: 4 அதிரடி மாற்றங்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே 2-0 என்ற முன்னிலையில் கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் இருஅணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் கேப்டவுனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலிரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததையடுத்து, இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்குர், வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்குப் பதில் சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சஹார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்ஸிக்குப் பதிலாக டுவெய்ன் பிரிடோரியஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT