ரஃபேல் நடால் 
செய்திகள்

ஆஸி. ஓபன் டென்னிஸ்: வரலாறு படைத்தார் ரஃபேல் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். 

DIN


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு சாதனை படைத்தார். 

உலகின் 2 ஆம் நிலை வீரரான ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவை தோற்கடித்து நடால் இறுதிப்போட்டியில் வெற்றி
 பெற்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 21வது முறையாக வென்று நடால் வரலாற்று சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் நகரில் இன்று (ஜன.30) நடைபெற்றது. இதில்

இதில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் - ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தினர். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் மெத்வதேவ் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 2-6, 6-7 என்ற செட் கணக்கில் மெத்வதேவ் முன்னிலை வகித்தார்.

இரண்டாவது சுற்றில் நடால் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மூன்றாவது, நான்காவது சுற்று ஆட்டத்தில் நடால் முன்னிலை பெற்றார். இறுதியில் 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் நடால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார். 

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 21வது முறையாக வென்று நடால் வரலாற்று சாதனை படைத்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT