செய்திகள்

ஒரு பந்து வீச்சாளராக பும்ரா வேண்டும் கேப்டனாக அல்ல : ராகுல் டிராவிட்

ஒரு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருப்பதைக் காட்டிலும் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் அதிகம் இருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

DIN

ஒரு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருப்பதைக் காட்டிலும் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் அதிகம் இருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அனுபவம் இல்லாத ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்த உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பும்ரா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், ராகுல் டிராவிட், பும்ரா ஒரு பந்துவீச்சாளராக அணிக்கு அதிகம் தேவை எனக் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார். 

இந்தப் பேட்டியில் பும்ரா குறித்து டிராவிட் கூறியிருப்பதாவது: “ பும்ரா எப்போதும் தனது பந்துவீச்சில் கவனமாக இருப்பார். ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் அவர் வல்லவர். ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு திறம்பட பந்துவீசக் கூடியவர். அவர் இதுவரை கேப்டனாக இருந்ததில்லை அதனால் இந்த புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். இருப்பினும், நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம். ஒரு வேகப் பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரண காரியமல்ல. தனது பந்துவீச்சிலும் அவர் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பீல்டிங் செட் செய்ய வேண்டும். கேப்டனாக இருப்பதைக் காட்டிலும் பும்ரா ஒரு பந்துவீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT