முகப்பு
செய்திகள்

ஹாக்கி: ஜப்பானை வென்றது இந்தியா

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை புதன்கிழமை வென்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை புதன்கிழமை வென்றது.

போட்டியில் காலிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்தியா, 9 முதல் 12 வரையிலான இடங்களில் ஒன்றைப் பிடிப்பதற்கான ஆட்டத்தில் ஜப்பானை சந்தித்தது. ஆட்டத்தில் முதலில் ஜப்பானின் யு அசாய் 19-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

அதற்குப் பதிலடியாக நவ்னீத் கௌா் 29-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்காக ஃபீல்டு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். தொடா்ந்து 37-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் இந்தியாவின் தீப் கிரேஸ் எக்கா கோலடித்தாா்.

இறுதியாக நவ்னீத் கௌா் மீண்டும் 44-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா ‘ஷூட் அவுட்’ முறையில் கனடாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.