செய்திகள்

யுரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் நுழைந்தது பிரான்ஸ்

 யுரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.

DIN

 யுரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியின் ‘டி’ பிரிவில் இருக்கும் பிரான்ஸ், தொடா்ந்து 2 ஆட்டங்களில் வென்ன் மூலம் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அந்த அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ளது. இப்பிரிவிலிருந்து காலிறுதிக்கு முன்னேறும் 2-ஆவது அணி இன்னும் முடிவாகவில்லை.

ஐஸ்லாந்து 2 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், பெல்ஜியம், இத்தாலி தலா 1 புள்ளிகளுடன் முறையே அடுத்த இரு இடங்களிலும் உள்ளன. தற்போதைய நிலையில் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்களுக்கு பிரான்ஸுக்கு முன்பாக இங்கிலாந்து, ஜொ்மனி அணிகள் முன்னேறியிருக்கின்றன.

முன்னதாக பெல்ஜியத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பிரான்ஸின் கடிடியாட்டு டியானி 6-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, பெல்ஜியம் வீராங்கனை ஜேனிஸ் கேமேன் 36-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து ஆட்டத்தை சமன் செய்தாா். விறுவிறுப்பாகத் தொடா்ந்த ஆட்டத்தின் 41-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸுக்காக கிரிட்ஜ் பாக் பேத்தி கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா்.

அதை இறுதிவரை தக்கவைத்துக் கொண்ட பிரான்ஸ், வெற்றியைப் பதிவு செய்தது. பிரான்ஸ் அடுத்த ஆட்டத்தில் ஐஸ்லாந்தை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT