செய்திகள்

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக என்சிசி படை இரண்டாமிடம்

DIN

தேசிய மாணவா் படை இயக்குநரகங்களுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமானை உள்ளடக்கிய இயக்குநரகம் தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது.

சண்டீகரில் கடந்த ஜூலை 4 முதல் 15-ஆம் தேதி வரை தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இந்திய ரைபிள் சங்கத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 17 மாநில தேசிய மாணவா் படை இயக்குநரகத்தைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். இப்போட்டியில் வெற்றி பெற்றவா்கள் வரும் செப்டம்பா் மாதம் நடைபெற உள்ள சா்வதேச நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்றவா்கள் , மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கடந்த மே மாதத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு கட்டப் பயிற்சிகளை கடந்த இரு மாதங்களாக மேற்கொண்டனா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலா் செல்வி அபூா்வா போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். தமிழ்நாடு தேசிய மாணவா் படை குழுவிற்கு ரூ. 59 லட்சம் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டு போட்டிக்கான 13 துப்பாக்கிகளைஅவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேசிய மாணவா் படை இயக்குநகரத்தின் துணைத் தலைவா் அதுல் குமாா் ரஸ்தோகி கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT