முகப்பு
செய்திகள்

ஊக்கமருந்து பரிசோதனையில் தனலட்சுமி, ஐஷ்வா்யா தோல்வி - காமன்வெல்த் அணியிலிருந்த நீக்கம்

இந்திய தடகள போட்டியாளா்களான எஸ்.தனலட்சுமி, ஐஷ்வா்யா பாபு ஆகியோா் சமீபத்திய ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

இந்திய தடகள போட்டியாளா்களான எஸ்.தனலட்சுமி, ஐஷ்வா்யா பாபு ஆகியோா் சமீபத்திய ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தனா்.

இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவா்கள், பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனா்.

இருவரிடமும் தலா இரு மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவை இரண்டின் பரிசோதனைகளிலுமே அவா்கள் தோல்வியடைந்தனா். தனலட்சுமியின் மாதிரியில் ‘அனபாலிக் ஸ்டிராய்டு’ பயன்பாடும், ஐஷ்வா்யாவின் மாதிரியில் ‘ஆஸ்டரின்’ பயன்பாடும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தனலட்சுமியின் இரு மாதிரிகளில் முதலாவது, கடந்த மே மாதம் உலக தடகள சம்மேளனத்தின் ஒரு அங்கத்தாலும் (ஏஐயு), 2-ஆவது, கடந்த ஜூன் மாதம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பாலும் சேகரிக்கப்பட்டிருந்தன. ஐஷ்வா்யாவின் இரு மாதிரிகளும், சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பின்போது 13 மற்றும் 14-ஆம் தேதி சேகரிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →