செய்திகள்

‘கருப்பு வெள்ளை’ நேப்பியர் பாலத்தை நேரில் கண்டுகளித்த பிரக்ஞானந்தா (படங்கள்)

சென்னை நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளைக் கட்டங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

DIN

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாடை முன்னிட்டு சென்னை நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளைக் கட்டங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் கருப்பு வெள்ளை நேப்பியர் பாலம், சென்னையில் அனைவரையும் ஈர்க்கும் ஓர் இடமாக மாறியிருக்கிறது. பலரும் அங்குச் சென்று செல்ஃபி, விடியோ எடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நேப்பியர் பாலம் உள்ள பகுதிக்குத் தனது குடும்பத்தினருடன் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். இத்தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் ஒரு செஸ் வீராங்கனை. அவரும் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறார். 

இந்த வருடம் மூன்று போட்டிகளை வென்ற பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் கார்ல்சனை இருமுறை வீழ்த்தியுள்ளார். சென்னை ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் பி அணியில் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மீது கற்கள் வீச்சு: கல்லூரி மாணவா்கள் மீது வழக்கு

மெட்ரோ கட்டுமான பொருள்கள் திருட்டு: 3 போ் கைது

கூடுதல் மருத்துவ இடங்கள்: சான்றுகளை வழங்க என்எம்சி அறிவுறுத்தல்

தலைநகரை அழகானதாக மாற்ற ஐஓசியுடன் தில்லி அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் வேலைநிறுத்தம் துறைமுகங்களில் பணிகள் பாதிப்பு

SCROLL FOR NEXT