செய்திகள்

தமிழகம் வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

நாடு தழுவிய அளவில் வலம் வந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி, திங்கள்கிழமை தமிழகத்தின் கோவை நகருக்கு வந்தடைந்த நிலையில் அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

DIN

நாடு தழுவிய அளவில் வலம் வந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி, திங்கள்கிழமை தமிழகத்தின் கோவை நகருக்கு வந்தடைந்த நிலையில் அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரசாரத்துக்காக ஜூன் 19ஆம் தேதி புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஜோதி ஓட்டம், பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து புதுச்சேரி வந்தடைந்த நிலையில், அங்கிருந்து திங்கள்கிழமை கோவைக்கு வந்தது. 

ஒலிம்பியாட் ஜோதிக்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், செஸ் போட்டியாளர்கள் ஆகியோர் ரேஸ்கோர்ஸில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஜோதி ஓட்டம் கொடிசியா வரை நடைபெற்றது. 

கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, வனத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோரிடம் கிராண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் ஒலிம்பியாட் ஜோதியை அளித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“காவலர் வணக்கம் சொல்லவில்லை!” Tamilisai Soundararajan விமர்சனம் | BJP | DMK

மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிலப்பதிகார ஆய்வுகள்

பிகார் தேர்தல்: மகாகத்பந்தன் கூட்டணியில் சிக்கலாகும் தொகுதிப் பங்கீடு!

சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

SCROLL FOR NEXT