செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண வேண்டுமா?: டிக்கெட் கட்டணத்தில் மகளிருக்குச் சலுகை!

DIN

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்), தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் இன்று முதல் (ஜூலை 28) ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்கள். 

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண ஆவலாக உள்ளதா? இந்தப் போட்டியை நேரில் காண வேண்டுமென்றால் அதற்குரிய சில வழிமுறைகள் உள்ளன.

அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் இணையத்தளத்தில் சென்னை ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இரு அரங்குகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பெரிய அரங்கில் நடைபெறும் ஆட்டங்களைக் காண்பதற்கான டிக்கெட்டுகள் ரூ. 300 முதல் ரூ. 8000 வரை விற்கப்படுகின்றன. சிறிய அரங்கின் டிக்கெட்டுகள் விலை ரூ. 200 முதல் ரூ. 6000 வரை. ரூ. 200, ரூ. 300 டிக்கெட்டுகள் பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதில் சேராத இந்தியர்கள் ரூ. 2000, ரூ. 3000 விலையில் உள்ள டிக்கெட்டுகளை வாங்கலாம். வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6000, ரூ. 8000 விலையில் உள்ள டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

இரு அரங்குகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 700 பேர் வரையிலான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். ரூ. 200 மற்றும் ரூ. 300 டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் அரங்கில் இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிகக் கட்டணங்களைக் கொண்ட டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் போட்டியை முழு நாளும் பார்வையிட அனுமதி உண்டு. முதல் அரங்கில் தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளின் வீரர்கள் பங்கேற்பார்கள். 

மேலும் பார்வையாளர்கள் அரங்கத்தினுள் மொபைல் போனை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. வெளியே உள்ள பாதுகாவலர்களிடம் மொபைல் போனைக் கொடுத்துவிட்டுச் செல்லலாம். அதேபோல பைக், கார் போன்ற வண்டிகளை நிறுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட்: டிக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT