செய்திகள்

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி அட்டவணை

மாமல்லபுரத்தில் வரும் இன்று முதல் (ஜூலை 28) ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

DIN

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்), தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் இன்று முதல் (ஜூலை 28) ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.  

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கிறாா்கள். 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அட்டவணை:

ஜூலை 28: தொடக்க விழா
ஜூலை 29, மாலை 3 மணி: முதல் சுற்று
ஜூலை 30, மாலை 3 மணி: 2-வது சுற்று 
ஜூலை 31, மாலை 3 மணி: 3-வது சுற்று
ஆகஸ்ட் 1, மாலை 3 மணி: 4-வது சுற்று
ஆகஸ்ட் 2, மாலை 3 மணி: 5-வது சுற்று
ஆகஸ்ட் 3, மாலை 3 மணி: 6-வது சுற்று
ஆகஸ்ட் 4: ஓய்வு நாள் 
ஆகஸ்ட் 5, மாலை 3 மணி: 7-வது சுற்று
ஆகஸ்ட் 6, மாலை 3 மணி: 8-வது சுற்று
ஆகஸ்ட் 7, மாலை 3 மணி: 9-வது சுற்று
ஆகஸ்ட் 8, மாலை 3 மணி: 10-வது சுற்று
ஆகஸ்ட் 9, காலை 10 மணி: 11-வது சுற்று
ஆகஸ்ட் 9, மாலை 4 மணி: நிறைவு விழா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகமதாபாத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனது கணவர் கூடைப்பந்து விளையாடுகிறாரா? ஃபிஃபா விருதில் புறக்கணிக்கப்பட்ட ரஃபீனியாவின் மனைவி கேள்வி!

ஜெர்மனியில் கார் ஆலையை பார்வையிட்ட ராகுல்!

எத்தனை பேரு.... ஜெயிலர் - 2 படத்தில் நோரா ஃபதேகி!

உற்பத்தித் துறை, மின்னணு பொருள் ஏற்றுமதியில் அதிரடி காட்டியிருக்கும் அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT