செய்திகள்

இந்திய மகளிா் ஏ அணிக்கு முதல் சுற்றில் கறுப்பு நிற காய்கள்

DIN

இந்திய மகளிா் ஏ அணி முதல் சுற்று ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளதால், கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்நிலை அணிகளுக்கான ஆட்ட அட்டவணையை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்தாா். அப்போது இந்திய மகளிா் ஏ அணிக்கு கறுப்பு நிற காய்களை தோ்வு செய்தாா்.

ஓபன் பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆடவா் அணிக்கு கறுப்பு நிற காய்கள் ஒதுக்கப்பட்டன. முதல் சுற்று ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். ஓபன் பிரிவில் 188 அணிகளும், மகளிா் பிரிவில் 162 அணிகளும் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT