டி.குகேஷ் 
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாடு வீரர்கள் 3 பேர் வெற்றி

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.  

DIN

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழ்நாடு வீரர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பி பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அதிபன் வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடி 37ஆவது நகர்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது சையத்தை வீழ்த்தி தமிழக வீரர் அதிபன் வெற்றி பெற்றார். 

இதேபோல் ஓபன் பிரிவில் தெற்கு சூடான் வீரர் அஜக்கை வீழ்த்தி கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் ஐக்கிய அமீரக வீரருடன் மோதிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளார். 

இதேபோல் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய சி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார். செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் ஏ பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார். 

39ஆவது நகர்த்தலில் தஜிகிஸ்தான் வீராங்கனை அப்ரோரோவா சப்ரினாவை வீழ்த்தி வைஷாலி வெற்றி பெற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT