செய்திகள்

இந்திய அணி மோசமாக விளையாடுகிறதா? ரோகித் சர்மா பதில்

இந்திய அணி வீரர்கள் விளையாடுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று ( ஜூலை 29) பேசியுள்ளார்.

DIN

இந்திய அணி வீரர்கள் விளையாடுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று ( ஜூலை 29) பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகள் நிறைவடைந்து இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நிறைவடைந்த நிலையில் ரோகித் சர்மா அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய அணி டி20 போட்டிகளில் மோசமாக விளையாடவில்லை என்றார். 

இது குறித்து ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: “ நாங்கள் உலகக் கோப்பையை வெல்லவில்லை. அதனால் டி20 போட்டிகளில் நாங்கள் மோசமாக விளையாடுகிறோம் என அர்த்தமில்லை. கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி 80 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. மோசமாக விளையாடினால் எப்படி இத்தனைப் போட்டிகளில் ஜெயிக்க முடியும். 

வீரர்கள் அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு அந்த சுதந்திரத்தைக் கொடுத்துள்ளோம். அப்போதுதான் அவர்களது சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டு அணிக்கு வெற்றி என்பது கிடைக்கும். சில நேரங்களில் ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமானதாக அமையாது. அதனால், வீரர்கள் மோசமாக விளையாடுகிறார்கள் என கூறிவிட முடியாது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT