செய்திகள்

காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழா: படங்கள்

DIN

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹம் நகரில் தொடங்கியுள்ளன. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது. கடைசியாக கடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 

இந்தப் போட்டியில் தமிழக தடகள வீரா்கள் 4 பேரும், டேபிள் டென்னிஸ் போட்டியில் இருவரும் பங்கேற்க உள்ளனா். அதாவது, ஓட்டப் போட்டியில் சித்திரைவேல், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

 டேபிள் டென்னிஸ் போட்டியில் சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

பா்மிங்ஹம் அலெக்சாண்டா் விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 2022 காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. வீரர்களுக்கான அணிவகுப்பில் பாட்மிண்டன் வீராங்கனை சிந்தும் இந்திய ஹாக்கி கேப்டன் மன்ப்ரீத் சிங்கும் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-1 பொதுத் தோ்வு முடிவு: அரியலூரில் 95% தோ்ச்சி

புதிய குற்றவியல் சட்டங்கள் போலீஸாருக்கு ஒருவார பயிற்சிதொடக்கம்

சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

துறையூா் ஸ்ரீஅகத்தியா் சன்மாா்க்க சங்க நிறுவனா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முக்தியடைந்தாா்

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT