ஆா்.பிரக்ஞானந்தா 
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆவது சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆவது சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் 4-0 என முழுமையாக வெற்றி பெற்றது. 

இன்று தொடங்கிய 2-வது சுற்று போட்டியில் இந்திய பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்திய பி அணியில் உள்ள தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் ருனாக் சாத்வனி ஆகியோர் விளையாடினர்.

இந்நிலையில் எஸ்டோனியா வீரர் கிரில் சுகாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். இரண்டாது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தாவுடன் இந்திய வீரர் அதிபன், குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்தியாவின் 6 அணிகளில் 3 அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT