செய்திகள்

சச்சினின் சாதனைகளோடு அர்ஜுன் டெண்டுல்கரை ஒப்பிடக்கூடாது: கபில்தேவ்

DIN

சச்சின் டெண்டுகல்கரின் சாதனைகளோடு அர்ஜுன் டெண்டுல்கரை ஒப்பிடக்கூடாது என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

சச்சினின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சாளராக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியலில் உள்ளார். இருப்பினும், இதுவரை ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை.

பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் “சச்சின் பல இமாலய சாதனைகளைப் படைத்தவர். அவரின் சாதனைகளோடு அர்ஜுன் டெண்டுகல்கரை ஒப்பிடக்கூடாது.  அர்ஜுன் டெண்டுல்கரை அவருடைய சுயமான பாதையில் விளையாட விட வேண்டும். சச்சினின் 50% சாதனைகளை அடைந்தாலே அது அர்ஜுனின் சாதனையாக இருக்கும்” என அர்ஜுன் டெண்டுல்கருக்கு  அறிவுரை வழங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT