செய்திகள்

நியூசிலாந்து 285 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு

DIN


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 9 ரன்கள் முன்னிலைப் பெற்று 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்பிறகு, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதன் தொடக்கமும் நியூசிலாந்துக்கு 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என மோசமாக அமைந்தது. எனினும், டேரில் மிட்செல் மற்றும் டாம் பிளன்ட்வெல் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து நியூசிலாந்தைக் காப்பாற்றினர். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் 97 ரன்களுடனும், பிளன்ட்வெல் 90 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், 3-ம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்துக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. 3-ம் நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மிட்செல் சதத்தை எட்டினார்.

சதத்தைக் கடந்து 108 ரன்கள் எடுத்திருந்த மிட்செல், ஸ்டுவர் பிராட் வீசிய 84-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து பந்திலேயே புதிதாகக் களமிறங்கிய காலின் டி கிராண்ட்ஹோம் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, கைல் ஜேமிசன் களமிறங்கினார். அவர் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார். இது இங்கிலாந்து ஒரு அணியாக வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிளன்ட்வெல்லும் 96 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தார். டிம் சௌதி மட்டும் சற்று அதிரடி காட்டி 21 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். அவரும் மேத்யூ பார்க்கின்சன் பந்தில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

91.3 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து 285 ரன்களுக்கு ஆட்டமிழந்து இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், மேத்யூ பார்கின்சன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அலெக்ஸ் லீஸை இழந்தது. கைல் ஜேமிசன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். 3-ம் நாள் ஆட்டம் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

ஸாக் கிராலோ 9 ரன்களுடனும், ஆலி போப் பந்தை எதிர்கொள்ளாமலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT