செய்திகள்

ட்ரோன் நிறுவனத்தில் எம்.எஸ். தோனி முதலீடு

DIN

முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கருடா ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். தற்போது  விவசாயத்துக்கு உதவும் நோக்கில் ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 

“கருடா வான்வெளி அமைப்பில் நானும் ஒரு பங்குதாரராவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது புதுமையான முயற்சியை பாராட்டுகிறேன். மேலும் அவர்களது வளர்ச்சியினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என விழாவில் தோனி கூறினார். 

“எம்.எஸ்.தோனி அர்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர். கேப்டன் கூல் கண்டிப்பாக எங்களது அணி சிறப்பாக உழைப்பதற்கு ஊக்குவிப்பார். நான் அவருக்கு மிகப்பெரிய ரசிகர். அவரது பங்களிப்பால் எங்கள் நிறுவனத்தின் கனவு நனவானது” என கரூடா நிறுவனத்தில் தலைமை செயலாளர் அக்னிஷ்வர் ஜெயக்குமார் கூறினார். 

கருடா வான்வெளி அமைப்பு 300 ட்ரோன்களையும், 26 நகரங்களில் 500 பைலட்ஸ் இயங்குபவர்களும் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி துவைக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT