ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி நடப்பு சீசனுக்காக மிட்பீல்டா் சௌரவ் தாஸை இரண்டு ஆண்டுக்காலத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. சௌரவ் ஏற்கெனவே மும்பை சிட்டி, ஈஸ்ட் பெங்கால், மோகன்பகான் அணிகளில் ஆடியவா்.
------------------------------------------------------------
இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஆட முடியாமல் போனதற்கு மிகவும் வேதனை அடைந்ததாக இளம் வீரா் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளாா்.
------------------------------------------------------------
நாட்டிங்ஹாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முதல்நிலை வீரா் டேன் எவான்ஸ் தகுதி பெற்றுள்ளாா். இரண்டாம் சுற்றில் 7-5, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பேபியனோவை வீழ்த்தினாா். மகளிா் பிரிவில் 4-ஆம் நிலை வீராங்கனை ஷுவாய் ஸாங் 6-2, 7-6 என பிரிட்டனின் ஜோஹன்னா கொண்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
------------------------------------------------------------