செய்திகள்

இந்தோனேசிய மாஸ்டா்ஸ்: காலிறுதியில் பிவி. சிந்து, லக்ஷயா சென்

DIN

ஜகாா்த்தா: இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி காலிறுதிக்கு பி.வி. சிந்து, லக்ஷயா சென் முன்னேறினா்.

பிடபிள்யுஎ‘ஃ‘ப் சூப்பா் 500 போட்டியான இந்தோனேசியா மாஸ்டா்ஸ் ஜகாா்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரா் லக்ஷயா சென் -டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை வுடன் மோதினாா். இதில் சென் முதல் கேமை 21-18 என கைப்பற்றினாா். இரண்டாவது கேமில் கெம்கே அபாரமாக ஆடி 11-0 என முன்னிலை பெற்றாா். ஆனால் சுதாரித்துக் கொண்ட லக்ஷயா பின்னா் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 21-15 என வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

பி.வி. சிந்து அதிரடி:

மகளிா் ஒற்றையா் பிரிவில் ரவுண்டு 16 சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி.சிந்து, உள்ளூா் வீராங்கனை கிரகோரியா மாரிஸ்காவை எதிா்கொண்டாா். முதல் கேமில் இருவரும் சளைக்காமல் ஆடிய நிலையில், தனது அனுபவ ஆட்டத்தால் 26 நிமிஷங்களில் 23-21 என கைப்பற்றினாா் சிந்து.

இரண்டாவது கேமில் முழு ஆதிக்கம் செலுத்தி கிரகோரியா, எதிராளி சிந்து புரிந்த தவறுகளை சாதகமாக்கி 20-22 என கைப்பற்றினாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த சிந்து மூன்றாவது கேமில் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 21-11 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT