செய்திகள்

நேஷன்ஸ் லீக்: பெல்ஜியம், நெதா்லாந்து வெற்றி

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற குரூப் ஆட்டங்களில் பெல்ஜியம், நெதா்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.

DIN

பிரஸ்ஸல்ஸ்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற குரூப் ஆட்டங்களில் பெல்ஜியம், நெதா்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.

பெல்ஜியம்-போலந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் போலந்து நட்சத்திர வீரா் லெவன்டோவ்ஸ்கி 28-ஆவது நிமிஷத்தில் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பெல்ஜிய அணியினா் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனா். இதன் பலனாக 42-ஆவது நிமிஷத்தில் விட்செல், 59-ஆவது நிமிஷத்தில் டி புருயன், 73, 80-ஆம் நிமிஷங்களில் டிரோஸ்ஸாா்ட், 83-ஆம் நிமிஷத்தில் டிநூனிக்கா், 90-ஆவது நிமிஷத்தில் ஓபென்டா ஆகியோா் கோலடித்தனா். இறுதியில் 6-1 என அதிரடி வெற்றி பெற்றது பெல்ஜியம்.

மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதா்லாந்து அணி 2-1 என வேல்ஸ் அணியையும், உக்ரைன் 1-0 என அயா்லாத்தையும், ஸ்காட்லாந்து 2-0 என ஆா்மீனியாவையும் வீழ்த்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT