ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை: ரூ. 44 ஆயிரம் கோடிக்கு ஏலம்
2023-2027 ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமை 410 ஆட்டங்களுக்கு ரூ. 44,075 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023-2027 ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமை 410 ஆட்டங்களுக்கு ரூ. 44,075 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமைக்கான இணையவழி ஏலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்தியத் துணைகண்டத்துக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பை ஏ தொகுப்பாகவும், டிஜிட்டல் உரிமை ஒளிபரப்பை பி தொகுப்பாகவும் பிரித்து ஏலம் நடத்தப்பட்டது. சி தொகுப்பு - ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை. டி தொகுப்பு - வெளிநாட்டு சந்தைகளுக்கான ஒருங்கிணைந்த தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை.
இதையும் படிக்க | ‘பயிற்சியாளர் எனும் பதவி தேவையில்லை; இங்கிலாந்து வீரர்களுக்கு உதவ நினைக்கிறேன்’ : கெவின் பீட்டர்சன்
இந்த ஏலத்தில் தொகுப்பு ஏ ஆனது, ஒரு ஆட்டத்துக்கு ரூ. 57.5 கோடி என மொத்தம் ரூ. 23,575 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொகுப்பு பி ஆனது ஒரு ஆட்டத்துக்கு ரூ. 50 கோடி என மொத்தம் ரூ. 20,500 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு ஐபிஎல் ஆட்டத்தை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை சேர்த்து மொத்தம் ரூ. 107.5 கோடி கிடைக்கப்பெறவுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த ஏலத்தில் இரண்டு ஒளிபரப்பு உரிமையை இரண்டு வெவ்வேறு ஊடக நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
2017-இல் ஸ்டார் நிறுவனம் ஏலம் எடுத்த விலையைக் காட்டிலும் தற்போதைய ஒளிபரப்பு உரிமை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.