பாகிஸ்தான் அணி 
செய்திகள்

ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்குப் பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது பாகிஸ்தான் அணி.

DIN

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது பாகிஸ்தான் அணி.

பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது. 106 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் இந்தியாவை விடவும் கூடுதலாக ஒரு புள்ளி பெற்றுள்ளது. இதனால் 4-ம் இடத்தைப் பிடித்து இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது  பாகிஸ்தான்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. 4-ம் இடத்தில் பாகிஸ்தானும் 5-ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதில் வெற்றிகளைப் பெறும்போது தரவரிசையில் முன்னேற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி ஆகஸ்டில் தான் அடுத்த ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT