செய்திகள்

பிருத்வி ஷாவுக்கு ஏன் வாய்ப்பில்லை?: ரசிகர்கள் கேள்வி

போதிய உடற்தகுதி அவரிடம் இல்லையா எனத் தேர்வுக்குழுவினர் தெளிவுபடுத்த வேண்டும்

DIN

தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரு டி20 தொடர்களிலும் இந்திய அணியில் மும்பை இளம் வீரர் பிருத்வி ஷா இடம்பெறவில்லை.

ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த இரு அணிகளிலும் இடம்பெற்ற நிலையில் பிருத்வி ஷா எந்தவொரு அணியிலும் இல்லாதது கேள்விகளை வரவழைத்துள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியில் 283 ரன்கள் எடுத்தார் பிருத்வி ஷா. உடல்நலக்குறைவு காரணமாக 10 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஆனால் அவருடைய ஸ்டிரைக் ரேட் - 152.97 ஆக இருந்தது. பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் தொடக்க வீரராக பிருத்வி ஷாவைத் தேர்வு செய்யவேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இரு இந்திய அணிகளிலும் பிருத்வி ஷாவின் பெயர் இல்லை. இதனால் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அதிக ரன்கள் எடுக்கவில்லையா அல்லது போதிய உடற்தகுதி அவரிடம் இல்லையா எனத் தேர்வுக்குழுவினர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

22 வயது பிருத்வி ஷா, இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள், 1 டி20 ஆட்டத்தில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 2 அரை சதங்கள், ஒரு சதம் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT