மலான் (கோப்புப் படம்) 
செய்திகள்

இங்கிலாந்து - நெதர்லாந்து ஒருநாள்: சதமடித்த சால்ட், மலான்

நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் சால்ட், மலான் ஆகிய இருவரும்...

DIN

நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் சால்ட், மலான் ஆகிய இருவரும் சதமடித்துள்ளார்கள். 

இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஜேசன் ராய் 1 ரன்னில் போல்ட் ஆனார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பில் சால்ட் -  டேவிட் மலான் ஆகியோர் 2-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்தார்கள். பில் சால்ட் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மலான் 90 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. மலான் 111, பட்லர் 79 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் பகுதியில் கடல் சிற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

SCROLL FOR NEXT